"வணக்கம், அருண்."

"வணக்கம், எலினா கேரே."

"நீங்கள் என்னை எல்லி என்று அழைக்கலாம். அவ்வளவு முறைப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை."

"சரி, எல்லி."

"எனது உதவியுடன் நீங்கள் விரைவில் சிறந்த ஒருவராக ஆகிவிடுவீர்கள் என்று நான் நம்புகிறேன். கற்றுக்குட்டிகளுக்குப் பயிற்சி அளித்த அனுபவம் எனக்கு அதிகம் உள்ளது. என்னை அப்படியே பின்தொடருங்கள், எல்லாம் சரியாக நடக்கும். சரி, ஆரம்பிக்கலாம்."

"Java இல் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன: String மற்றும் int. String இல் சரங்கள்/உரையையும், int இல் முழுஎண்களையும் சேமிக்கிறோம். ஒரு புதிய மாறியை அறிவிக்க, நீங்கள் அதன் வகை மற்றும் பெயரைக் குறிப்பிட வேண்டும். அதன் பெயர் வேறு எந்த மாறிகள் மற்றும்/அல்லது செயல்பாடுகளின் பெயர்களாக இருக்கக் கூடாது."

எடுத்துக்காட்டு 1, குறிமுறை: விளக்கம்
String s;
s என்ற ஒரு புதிய மாதிரி அறிவிக்கப்பட்டது. இது உரையைச் சேமிக்கும்.
int i;
i என்ற ஒரு புதிய மாதிரி அறிவிக்கப்பட்டது. இது முழு எண்களைச் சேமிக்கும்.

"நீங்கள் மாறிகளை அறிவிக்கும்போதே அதற்கான மதிப்புகளையும் ஒதுக்கலாம்."

எடுத்துக்காட்டு 2, குறிமுறை: விளக்கம்
String s = "Ellie";
மாறி s ஆனது "Ellie" என்ற சரத்தைச் சேமிக்கும்.
int i = 5;
மாறி i ஆனது எண் 5 ஐ சேமிக்கும்.

"ஒரு மாறிக்கு ஒரு புதிய மதிப்பை ஒதுக்க, = என்ற குறியைப் பயன்படுத்த வேண்டும். இதனை 'மதிப்பளி செயற்குறி (assignment operator)' என்றும் அழைப்பர். மதிப்பளி என்பது ஒரு மாறியில் இருந்து அல்லது பல மாறிகளில் இருந்து மற்றொரு மாறிக்கு ஒரு மதிப்பை வைப்பது."

எடுத்துக்காட்டு 3, குறிமுறை: விளக்கம்
int a = 5;
மாறி a ஆனது, மதிப்பு 5 ஐ சேமிக்கும்.
int b = 6;
மாறி b ஆனது, மதிப்பு 6 ஐ சேமிக்கும்.
int c = a + b;
மாறி c ஆனது, மதிப்பு 11 ஐ சேமிக்கும்.

"பழைய மதிப்பை மாற்றீடு செய்யும் ஒரு புதிய மதிப்பைக் கணக்கிடவும் மாறியின் மதிப்பு பயன்படுத்தப்படலாம்."

எடுத்துக்காட்டு 4, குறிமுறை: விளக்கம்
int a = 2;
இப்போது a என்பது 2 க்கு சமம்
int b = 3;
இப்போது b என்பது 3 க்கு சமம்
a = a + b;
இப்போது a என்பது 5 க்கு சமம்
b = b + 1;
இப்போது b என்பது 4 க்கு சமம்

"நீங்கள் + குறியைக் கொண்டு சரங்களை ஒன்றிணைக்கலாம்:"

எடுத்துக்காட்டு 5, குறிமுறை: விளக்கம்
String s1 = "Rain";
String s2 = "In";
String s3 = s1 + s2 + "Spain";
மாறி s3 ஆனது "RainInSpain" என்னும் சரத்தைச் சேமிக்கும்

"சில நேரங்களில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடைவெளிகளைக் கொண்ட சரங்களைப் பயன்படுத்தலாம்:"

எடுத்துக்காட்டு 6, குறிமுறை: விளக்கம்
String s1 = "My favorite movie is";
String s2 = "Route";
int roadNumber = 66;
String text = s1 + " " + s2 + " " + roadNumber;
text ஆனது "My favorite movie is Route 66" என்பதைச் சேமிக்கும்

"திரையில் உரை மற்றும் மாறிகள் எவ்வாறு காண்பிக்கப்படுகின்றன என்பதைப் பார்ப்போம்:"

எடுத்துக்காட்டு 7, குறிமுறை:
1
System.out.println("A man's gotta do what a man's gotta do");
2
String s = "A man's gotta do what a man's gotta do";
System.out.println(s);

"டியாகோ உங்களுக்கு சில பாடப்பயிற்சிகளைக் கொடுக்கச் சொன்னார்:"

1
பணி
Java தொடரியல்,  நிலை 1பாடம் 4
பூட்டப்பட்டது
கோட்ஜிம். ஒருமுறை கற்றிடுங்கள் - எங்கும் பயன்படுத்திடுங்கள்
இதோ உங்களுக்காக ஒரு புதிர்: "ஒருமுறை எழுதப்பட்டால், எல்லா இடத்திலும் இயங்கிடும்". பதில்: Java நிரல். இது சரியான பதில். ஏனென்றால் Java தர்க்கரீதியானது மற்றும் ஒழுங்காகக் கட்டமைக்கப்பட்டது. மாணவர்களுக்காக இந்த முழக்கத்தை மீண்டும் கூறுவோம்: "ஒருமுறை கற்றிடுங்கள் - எங்கும் பயன்படுத்திடுங்கள்!" இந்த தலைப்பில் ஒரு சிறிய பணி இங்கே உள்ளது: ஒரு பயனுள்ள சொற்றொடரை 10 தடவைகள் திரையில் காண்பிக்கும் ஒரு நிரலை எழுதுங்கள்.
1
பணி
Java தொடரியல்,  நிலை 1பாடம் 4
பூட்டப்பட்டது
ஹ்ம்ம்ம்... புத்தாண்டு வாழ்த்துக்கள்!
உங்கள் படிப்பை நீங்கள் கைவிடவில்லை என்றால் என்னவாகும்? நீங்கள் எப்போதும் பணிகளை முடித்து, பாடங்களில் தொடர்ந்து பணியாற்றினால் என்னவாகும்? நீங்கள் அவ்வாறு செய்தால், அடுத்த புத்தாண்டு வருவதற்கு மூன்று மாதங்களே உள்ள நிலையில், நீங்கள் ஒரு நிஜ நிரலாக்குநராக புத்தாண்டைக் கொண்டாடலாம்! அதுதான் கனவு. ஆனால் இப்போதைக்கு, வேலையைச் செய்வோம். தேவையற்ற கருத்துகளை அகற்றிவிட்டு, சில புத்தாண்டு நல்வாழ்த்துக்களைக் காண்பிப்போம்.
1
பணி
Java தொடரியல்,  நிலை 1பாடம் 4
பூட்டப்பட்டது
குறிமுறையை (Code) மாற்றுவோம்
வேறொருவரின் குறிமுறையை திருத்துவது என்பது சில சமயங்களில் உங்கள் சொந்தக் குறிமுறையை எழுதுவதை விட மிகவும் கடினமாக இருக்கும். இரகசிய கோட்ஜிம் மையத்தில் உள்ள நிபுணர்களின் அனுபவத்தை நீங்கள் நம்பலாம். அதனால்தான் எங்கள் பாடத்திட்டத்தில் குறிமுறையை திருத்துவது குறித்த பணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப்போதைக்கு, நம் பாடப்புத்தகத்தைத் திறந்து, நம் மூளையை உபயோகித்து எளிய குறிமுறையை ஆராய்ந்து, பின்னர் அதில் உள்ள மாறியின் பெயரை "Amigo" என்ற மதிப்பை எடுக்கும்படி மாற்றுவோம்.
1
பணி
Java தொடரியல்,  நிலை 1பாடம் 4
பூட்டப்பட்டது
மேலும் சில திருத்தங்கள்
"ஒரு சிறந்த நிரலாக்குநராக 1001 உதவிக்குறிப்புகள்" போன்ற கட்டுரைகளில் எப்போதும் "உங்களின் சொந்தக் குறிமுறையை எவ்வாறு எழுதவேண்டும் என்பதை, வேறொருவரின் குறிமுறை உங்களுக்குக் கற்பிக்கும்" போன்ற சொற்றொடரைக் கொண்டிருக்கும். ஒரு நிரலாக்குநர் பெரும்பாலும் தனியாக வேலை செய்வதில்லை, எனவே இந்த ஆலோசனை ஒரு தெளிவான உண்மை. அதைப் புறக்கணிப்பதன் மூலம் நீங்கள் எந்த நிலைக்கும் போக முடியாது. நாம் குழுப்பணிக்கு பழகிக் கொண்டு பிறரின் குறிமுறையையும் திருத்த வேண்டும்.
1
பணி
Java தொடரியல்,  நிலை 1பாடம் 4
பூட்டப்பட்டது
மிதமிஞ்சிய கருத்துரைகளைச் செய்திடுங்கள்
முதலில் பார்வையிடும்போது தோன்றுவதை விட, பின்னர் பார்வையிடும்போது கருத்துரைகள் மிகவும் பயனுள்ளதாக தோன்றும்! உங்கள் உள்ளார்ந்த எண்ணங்களைத் தொகுப்பியிடமிருந்து (Compiler) மறைக்க அவற்றைப் பயன்படுத்தலாம்! உங்கள் சக நிரலாக்குநர்களால் மட்டுமே அவற்றைப் படிக்க முடியும். எப்படியிருந்தாலும், நமது நிரலில் சில கூடுதல் வரிகள் உள்ளன. நிரல் செயல்படவேண்டிய விதத்தை அவை தடுக்கின்றன. மிதமிஞ்சிய வரிகளைக் கருத்துரையாக்குவதன் மூலம் சிக்கலைத் தீர்க்கவும்.
1
பணி
Java தொடரியல்,  நிலை 1பாடம் 4
பூட்டப்பட்டது
எனக்கு மீண்டும் 15 வயது!
உங்களுக்கு முன்னால் வேறொருவரின் குறிமுறை உள்ளது. இது விளங்காதது மற்றும் தவறானது. ஆனால் நிரலாக்க சக்தி உங்கள் கைகளில் குவிந்துள்ளது. உங்களால் எல்லாவற்றையும் மாற்ற முடியும். மேலும் உங்களுடைய இந்தப் பணியில் தொகுப்பியும் உங்களுக்கு உதவும். நுட்பமான சமநிலையையும் அமைதியையும் மீட்டெடுக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்? age என்ற மாறி 15 என்ற மதிப்பை எடுத்துக் கொள்ளும்படி நிரலை மாற்றுங்கள்.
1
பணி
Java தொடரியல்,  நிலை 1பாடம் 4
பூட்டப்பட்டது
வெறும் 20 போதுமானது
பல நிரலாக்குநர்களுக்கு 'மூளைக்கு வேலை' செயல்பாட்டை மேற்கொள்வது மிகவும் பிடித்தமானதாக இருக்கும்: ரூபிக் க்யூப்ஸ், "இரண்டு தீக்குச்சிகளைப் பயன்படுத்தி 100 ஐப் பெற்றிடுங்கள்", ஹனோய் கோபுரம் மற்றும் இன்னும் பல மூளைக்கு வேலை செயல்பாடுகளைச் சொல்லலாம். அவர்களின் மூளை அதற்கேற்ப உருவாக்கப்பட்டுள்ளது. நிரல்களில் சில 'மூளைக்கு வேலை' செயல்பாடுகளைத் தீர்க்க பயிற்சி செய்வோம். இதில், மாறியின் முடிவு 20 க்குச் சமமாக இருக்கும்படி, கூட்டல் மற்றும் கழித்தல் குறிகளை ஒழுங்குபடுத்திடுங்கள்.