கோட்ஜிம் கன்ஃபூசியஸ்

நிலை 1

"முதல் நிலையை அடைந்ததற்கு வாழ்த்துக்கள்!"

"நன்றி! நான் நினைத்ததை விடவும் அது எளிதாக இருந்தது."

"மிக முக்கியமாக, அது உற்சாகமாகவும் இருந்தது."

"இது இன்னும் உற்சாகமளிக்கும். நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். தயாரா?"

"சரி, தொடருவோம்!"

எதிர்காலம் ஏற்கனவே உங்களிடம் வந்துவிட்டது

20ஆம் நூற்றாண்டின் முக்கியமான பொருட்களில் வேக்யூம் கிளீனர், வாஷிங் மெஷின், டிவி மற்றும் கார் போன்றவை அடங்கும்.

நீங்கள் இன்னும் உங்கள் துணிகளைக் கைகளால் சலவை செய்கிறீர்கள், குதிரை சவாரி செய்கிறீர்கள் அல்லது மெழுகுவர்த்தியைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து வரும் நபர்கள் உங்களைப் பார்த்து 1800களில் நீங்கள் வாழ்ந்து வருவதாகக் கூறுவார்கள்.

21ஆம் நூற்றாண்டானது இணையம், மொபைல் போன்கள், ஸ்கைப் மற்றும் சமூக வலைதளங்களால் வகைப்படுத்தப்பட்டது.

எல்லா மனித அறிவையும் அணுக இணையம் அனுமதிக்கிறது. ஆன்லைனில் உங்கள் வணிகத்தைமேற்கொள்ள முடியும், ஆன்லைனில் கல்வியைப் பெறமுடியும் அல்லது ஆன்லைனிலேயே கற்பிக்கவும் முடியும்.

சமூக வலைதளங்கள் மூலம், நண்பர்கள், வேலை, காதலன்/காதலி, பொழுதுபோக்குக் குழு போன்றவற்றை உங்களால் கண்டுபிடிக்க முடியும். கிட்டத்தட்ட உலகில் உள்ள எந்தவொரு நபரையும் நீங்கள் அறிந்து கொண்டு, அவரிடமோ அல்லது அவளிடமோ ஆலோசனை அல்லது உதவியைக் கேட்கமுடியும். நீங்கள் உலகம் முழுவதிலுமுள்ளவர்களுடன் நட்பு கொள்ள முடியும், அவர்களைச் சந்திக்க முடியும், அவர்களை அழைக்க முடியும் அல்லது அவர்களுடன் ஒன்றாகப் பயணம் செய்ய முடியும்.

உங்கள் நண்பர்கள், சகோதரர்கள், சகோதரிகள், பெற்றோர்கள், உறவினர்கள் அல்லது எந்த நாட்டில் உள்ள யாருடனும் உங்களால் ஸ்கைப்பில் அரட்டை அடிக்க முடியும். உலகில் எந்த இடத்திலிருந்தும் இலவசமாக இருவழி வீடியோத் தொடர்பு கொள்ள முடியும் என்று சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நாம் கனவு கூட கண்டிருக்க மாட்டோம். இன்று, இது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டது.

எந்த நாட்டிலும் எந்த நகரத்தின் தெருக்களிலும் மெய்நிகர் உலா செல்வதற்கு கூகுள் வீதிக்காட்சி உதவுகிறது. உங்கள் வாழ்நாளின் மீதி நாட்களைச் செலவிட விரும்பும் இடத்தைத் தேர்வுசெய்து அங்கு இடம்பெயர முடியும்.

நவீன ஸ்மார்ட்போன்கள், அவற்றின் உரிமையாளர்களைமற்றவர்ளுடன் பேசவும் அல்லது அவர்களுக்கு உரை அனுப்பவும், படங்களை அனுப்பவும், வலையில் தகவல்களைப் பார்க்கவும், ஆயிரக்கணக்கான இலவச பயன்பாடுகளை நிறுவவும் அனுமதிக்கின்றன. "வேறு என்ன?" வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளுங்கள், இசையைக் கேளுங்கள், வீடியோக்களைப் பாருங்கள், வீடியோக்கள் அல்லது புகைப்படங்களை எடுங்கள், வரைபடத்தில் உங்கள் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து, குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள், காலெண்டர் பயன்பாடுகளைப் பயன்படுத்துங்கள், சமூக வலைதளங்களில் மற்றவர்களுடன் நட்புறவாடிடுங்கள், நிச்சயமாக, அழகான பூனைக்குட்டி படங்களைக் கொண்ட இடுகைகளுக்கு விருப்பம் தெரிவித்திடுங்கள்.

உங்கள் பயணத்தின் போது ஆடியோ பாடங்களைக் கேட்பதன் மூலம் ஒரே வருடத்தில் ஒரு வெளிநாட்டு மொழியைக் கற்றுக்கொள்ள முடியும். எந்தத் தகவல் தேவைப்பட்டாலும், அதற்கான பாடப்புத்தகம் ஆன்லைனில் கிடைக்கிறது. உலகின் மிகச்சிறந்த கல்லூரிகளின் வீடியோ விரிவுரைகளை வசனத்துடன் பார்க்க விரும்புகிறீர்களா? எந்த பிரச்சினையும் இல்லை: - இங்கு அவற்றைப் பார்க்கலாம்.

நீங்கள் ஒரு புத்தகத்தை எழுதி, அதை Amazon.com இல் பதிவேற்றி பணம் சம்பாதிக்கலாம். சிறு முதலீட்டின் மூலம் உங்கள் சொந்த வலைத்தளத்தை உருவாக்கி உலகளாவிய ஆன்லைன் வணிகத்தை நடத்தலாம்.

20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தது போதும். நீங்கள் என்ன கற்க வேண்டும், உங்கள் தேர்வுகளை எப்போது எடுக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும், எங்கு வாழ வேண்டும் என்று யாரோ ஒருவர் உங்களுக்கு சொல்லும் வரை காத்திருந்தது போதும்! இது உங்கள் கையில்தான் உள்ளது. உங்கள் வாழ்க்கையை மாற்றும் வாய்ப்புகள் எல்லா இடங்களிலும் உள்ளன.

ஒரு பழைய நகைச்சுவையுடன் முடித்துக் கொள்வோம்:

ஒரு காலத்தில் பயங்கர வெள்ளம் ஏற்பட்டது. எல்லோரும் தப்பிக்க முயன்றனர். ஆனால் ஒரு பக்தியுள்ள முதியவர் மட்டும் வீட்டில் தங்கி ஜெபம் செய்தார்.
ஒரு டிரக்கில் பயணம் செய்து கொண்டிருந்தவர்கள் அவரிடம்,
"டிரக்கின் உள்ளே குதித்து, உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்!"
என்று கூச்சலிட்டனர். "நான் என் வாழ்நாள் முழுவதும் கடவுளிடம் பிரார்த்தித்து கடவுளின் கட்டளைகளை நிறைவேற்றி வருகிறேன். கடவுள் என்னைக் காப்பாற்றுவார்,” என்று அந்த நபர் சொன்னார்.
அவரது ஜன்னல் வரை தண்ணீர் அதிகரித்தபோது, ஒரு படகு வந்தது. அதே அறிவுரை, அதே பதில்.
பின்னர் தண்ணீர் கூரையை அடைந்தது. அந்த மனிதன் கூரை மீதிருந்து ஜெபித்துக்கொண்டே இருந்தார்.
ஒரு ஹெலிகாப்டர் வந்தது. மறுபடியும், அதே அறிவுரை, அதே பதில்.
கடைசியில், அந்த மனிதர் நீரில் மூழ்கி இறந்து, சொர்க்கத்திற்குச் சென்றார். அங்கே அங்கு அவர் கடவுளை நிந்தித்தார்:
"நான் என் வாழ்நாள் முழுவதும் பிரார்த்தனை செய்து நல்லவனாக இருந்தேன். என்னை ஏன் மூழ்கடித்தீர்கள்?"
அதற்கு கடவுள், " நான் உனக்காக ஒரு டிரக், ஒரு படகு மற்றும் ஒரு ஹெலிகாப்டரை அனுப்பினேன். "நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?