"வணக்கம், அருண். எங்களது இடைவேளையின் போது டியாகோவும் நானும் நகைச்சுவைகளை கூறிக் கொண்டிருந்தோம். எங்களுடன் சேர்ந்து கொள்கிறீர்களா?"

"ஆம், நிச்சயமாக."

வெறித்தனமாக கணினி விளையாட்டுகளை விளையாடி வந்த முதலாவது மற்றும் ஐந்தாவது ஆண்டு படிக்கின்ற இரண்டு மாணவர்கள், படிக்கும் போதே விளையாட முடியுமா என்று ஒரு பந்தயம் கட்டினர். நீண்டநேர விவாதத்திற்குப் பிறகு, அவர்கள் இறுதியாகத் தங்களின் டீனிடம் கேட்க முடிவு செய்தனர். நிச்சயமாக, அவருக்குத் தெரிந்திருக்கும்.
"பரீட்சைகளுக்குத் தயாராகும் போது நாள்முழுவதும் கணினி விளையாட்டுகளை விளையாடலாமா?” என்று முதல் ஆண்டு மாணவர் கேட்டார்.
"முட்டாள்தனம்! படிக்கும் போது விளையாடக்கூடாது!” என்று கோபமாக அவர் திட்டினார்.
"கணினியை இயக்கிக் கொண்டே நான் படிக்கலாமா?” என்று ஐந்தாம் ஆண்டு மாணவர் கேட்டார்.
"நிச்சயமாக! எப்போதும் அவ்வாறு படிக்கலாம்!" என்று அவரை பாராட்டி டீன் பதிலளித்தார்.