(ஒரு மணி நேரத்திற்குப் பிறகு)
"பயங்கரம்! நாம் எங்கே நிறுத்தினோம்?"
"ஒரு வழிமுறைக்குள் (method) இருக்கும் குறிமுறை அல்லது அது போன்ற ஏதோ ஒன்று."
"சரியாகச் சொன்னீர்கள். சரியாக. ஒரு வழிமுறையின் உடல்பகுதியில் கட்டளைகள் இருக்கும். ஒரு வழிமுறை என்பதை ஒரு பெயர் (வழிமுறையின் பெயர்) வழங்கப்பட்ட கட்டளைகளின் குழு என்றும் கூறலாம். இரண்டு கூற்றுகளும் உண்மை."
"எல்லா வகையான கட்டளைகளும் உள்ளன. உங்கள் கிரகத்தில் நாய்கள் இருக்கிறதா??"
"வீட்டில் வளர்க்கப்பட்ட ரோபோ ஓநாய்கள் மட்டுமே."
"ஆம். 'கடி', 'சாப்பிடு', 'கிழி', 'நல்லது! எழுந்து நில்!'"
"ஹம்ம்ம். நல்ல கட்டளைகள்தான்! ஆனால் அவை அதிகமாக இல்லை."
"நமக்கு எத்தனை வேண்டும்?"
"Java மொழியில் ஒவ்வொரு சூழலுக்கும் கட்டளைகள் உள்ளன. ஒவ்வொரு கட்டளையும் சில செயல்களை விவரித்திடும். ஒவ்வொரு கட்டளையின் முடிவிலும், அரைப்புள்ளியைப் பயன்படுத்துவோம்."
"கட்டளைகளின் சில எடுத்துக்காட்டுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:"
கட்டளை | விளக்கம் (அது என்ன செய்யும்) |
---|---|
|
திரையில் எண் 1 ஐக் காட்டும் |
|
திரையில் "Amigo" என்று காட்டும் |
|
திரையில் "Rishi & Amigo" என்று காட்டும்
|
"உண்மையில், இது வெறும் System.out.println
என்ற ஒரு கட்டளைதான். கட்டளைக்கு செயலுருபுகளை (arguments) அனுப்ப அடைப்புக்குறிகளைப் பயன்படுத்த வேண்டும். செயலுருபுகளின் மதிப்பைப் பொறுத்து, ஒரே கட்டளையால் வெவ்வேறு செயல்களைச் செய்ய முடியும்."
"அது மிகவும் வசதியானதுதான்."
"ஆம். நீங்கள் திரையில் சில உரையைக் காட்ட விரும்பினால், அதன் ஒவ்வொரு பக்கத்திலும் இரட்டை மேற்கோள் குறியை இடவேண்டும்.
ஒற்றை மேற்கோள் குறி இது போன்று இருக்கும்: '
. இரட்டை மேற்கோள் குறி இது போன்று இருக்கும்: "
. இரட்டை மேற்கோள் குறியும், இரண்டு ஒற்றை மேற்கோள் குறியும் ஒன்றல்ல. தயவுசெய்து அவற்றைக் குழப்பாதீர்கள்."
"இரட்டை மேற்கோள் குறி விசையானது விசைப்பலகையின் Enter பொத்தானுக்கு அடுத்ததாக இருக்கும், இல்லையா?"
"சரியாகச் சொன்னீர்கள்."
அருணின் துடிப்பு 3 முதல் 5 GHz வரை அதிகரித்தது. அவரால் இன்னும் அதை நம்ப முடியவில்லை. திரையில் சரங்களை (strings) எவ்வாறு அச்சிடுவது என்பதை அவர் கற்றுக்கொண்டார். அது அவர் எதிர்பார்த்ததை விடவும் எளிதாக இருந்தது.
அருண் தனது கவனத்தைத் திசைத்திருப்பி, ஜன்னலுக்கு வெளியே பார்த்து அமைதியடைந்தார். இலைகள் மஞ்சளாக மாறிக் கொண்டிருந்தன. துருப்பிடிக்கும் காலம் ஆரம்பிக்கப் போகிறது என்பதை அறிந்து தானாகக் குறிப்பெடுத்துக் கொண்டார். அங்கிருந்த விளக்கு, வழக்கத்தை விட அதிக தூரம் பார்ப்பதில் அவருக்கு உதவியது. புதியவர்களின் தொழில்நுட்பம் உண்மையில் மிகவும் மேம்பட்டது. ஆனால் அவர் இப்போது இலைகளைப் பற்றி கவலைப்பட்டாரா? அவர் தனது அறிவை மாலைப் பொழுதுக்குள் மீண்டும் அதிகப்படுத்திக் கொள்வார்!
ஆனால் அவரது எண்ணங்கள் அமைதியாகாது. ஒரு நாள், துருப்பிடிக்கும் காலத்தின் போது அனைத்து ரோபோக்களும் தத்தமது வீடுகளில் தஞ்சமடைய ஒரு நிரலை அவர் எழுதுவார். அந்த நிரல் மட்டுமே ஆயிரக்கணக்கான ரோபோக்களின் உயிர்களைக் காப்பாற்றும்…
"இந்த கட்டளைக்கு இரண்டு பதிப்புகள் உள்ளன: System.out.println()
மற்றும் System.out.print()
"
"System.out.println()
கட்டளையை ஒரு சிலமுறை பயன்படுத்தினால், ஒவ்வொரு முறையும் கட்டளைக்கு நீங்கள் அனுப்பும் உரை தனி வரியில் காட்டப்படுவதைக் காண்பீர்கள். System.out.print()
கட்டளையைப் பயன்படுத்தினால், ஒரே வரியில் உரை காட்டப்படும். எடுத்துக்காட்டாக:"
கட்டளைகள் | திரையில் என்ன காண்பிக்கப்படும் | |
---|---|---|
1 |
|
Amigo Is The Best |
2 |
|
AmigoIs The Best |
3 |
|
AmigoIs TheBest |
"இதை நினைவில் கொள்ளுங்கள்: println
புதிய வரியில் இருந்து உரையை அச்சிடத் தொடங்காது. இது தற்போதைய வரியில் உரையை அச்சிடும். ஆனால் அடுத்த உரையைப் புதிய வரியில் அச்சிடச் செய்யும்."
" println()
கட்டளையானது, திரையில் உரையை அச்சிட்டு, காணப்படாத ஒரு சிறப்பு 'புதியவரி எழுத்தை' சேர்த்திடும். இதுதான் அடுத்த உரையை புதிய வரியில் தொடங்க செய்கிறது."
"முழு நிரலும் எப்படி இருக்கும்?"
"திரையைப் பாருங்கள்:"
public class Home
{
public static void main(String[] args)
{
System.out.print("Amigo ");
System.out.print("Is The ");
System.out.print("Best");
}
}
"ஓ! எல்லாம் தெளிவாக உள்ளது. சொற்களின் இறுதியில் இடைவெளிகளைச் சேர்த்துள்ளோம். அப்போதுதான் அவை அனைத்தும் ஒன்றாக இயங்காது, இல்லையா?"
"மிகச் சரியாகச் சொன்னீர்கள். நீங்கள் புத்திசாலிதான்."
இந்தக் கருத்து அருணைப் பெருமை கொள்ளச் செய்கிறது.
"நல்லது. இதோ உங்கள் முதல் பணி."
GO TO FULL VERSION