image-ru-01-02

"வணக்கம், அருண். என் பெயர் ஜான், கேலக்டிக் ரஷ்ஷின் கேப்டன்."

"இனிய நாள், கேப்டன்."

"கற்றல் செயல்முறை எவ்வாறு செயல்படுகிறது என்பதையும், எங்கள் சேவைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் நான் உங்களுக்கு விளக்குகிறேன்."

"நடைமுறை நிரலாக்கத் திறன்களைப் பெறுகின்ற அதேசமயத்தில், அந்தப் பயணம் நிறைய வேடிக்கையாகவும் இருக்க வேண்டும் என்பது எங்கள் முதன்மைக் குறிக்கோள். இது நிரலாக்குநர் வேலையைப் பெறுவதை எளிதாக்கும். இதை அடைவதற்கு, பாடங்களில் நாங்கள் பயிற்சிகளைப் பயன்படுத்துகிறோம். நிறைய பயிற்சிகள் உண்டு. ஆம், நிஜமாகவே, ஏராளமாக."

இவை அனைத்தும் எவ்வாறு வேலை செய்கின்றன

இந்த முழு பாடத்திட்டமும் நான்கு அலகுகளாக அல்லது க்வெஸ்ட்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன: Java நிரல்தொடரி (Syntax), Java உள்ளகம் (Core), Java பல்புரியாக்கம் (Multithreading) மற்றும் Java தொகுப்புகள் (Collections). ஒவ்வொரு க்வெஸ்ட்டும் பத்து நிலைகளைக் கொண்டிருக்கும். மேலும் ஒவ்வொரு நிலையிலும் 10-15 பாடங்கள் மற்றும் 20-30 பாடப்பயிற்சிகள் இருக்கும்.

நீங்கள் முடிக்கும் ஒவ்வொரு பணிக்கும், உங்களுக்கு சில கரும்பொருட்கள் வழங்கப்படும். உங்கள் நாட்டத்தில் முன்னேற, புதிய நிலைகளையும் பாடங்களையும் திறக்க உங்களுக்கு கரும்பொருள் தேவை.

நீங்கள் விரும்பும் வழியில் பணிகளை முடிக்கலாம். பாடங்களைப் படிக்கும் போதே நீங்கள் பாடப்பயிற்சிகளை எடுக்கலாம் அல்லது முதலில் பாடங்களைப்புரிந்துகொண்டுவிட்டு, அதன்பின்னர் பாடப்பயிற்சிகளைத் தனியாக எடுக்கலாம். எது உங்களுக்குச் சிறப்பாகத் தோன்றுகிறதோ அதைச் செய்யுங்கள்.

அடுத்த நிலைக்கு அல்லது பாடத்திற்கு முன்னேறுதல்

அடுத்த பாடம் அல்லது நிலைக்கு முன்னேற, அதைத் திறப்பதற்குச் "செலுத்த" போதுமான "கரும்பொருட்களை" நீங்கள் சேகரிக்க வேண்டும். அது இதுபோன்று இருக்கும்:

ஒருக்வெஸ்ட்டிற்குள், நீங்கள் பாடங்களை வரிசையாகத் திறக்க வேண்டும். முதலிலுள்ளவற்றைத் தவிர்த்துவிட்டு நடுவிலுள்ள பாடங்களை உங்களால் எடுக்க முடியாது. இருப்பினும், பாடத்தை ஒருமுறை திறந்துவிட்டால், அதை எப்போது வேண்டுமானாலும் அணுகமுடியும். நீங்கள் எந்த நேரத்திலும் அதை மீண்டும் படிக்கவோ அல்லது எடுத்துக்காட்டுகளை மீண்டும் பார்வையிடவோ செய்யலாம்.

மேலும், நான் முன்பு குறிப்பிட்டது போல, பணிகளை முடிப்பதன் மூலம் நீங்கள் கரும்பொருட்களைப் பெறலாம். நீங்கள் எவ்வளவு கரும்பொருட்களைப் பெறுவீர்கள் என்பது ஒவ்வொரு பணியின் விவரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக, பின்வரும் பணிக்கு நீங்கள் 1 யூனிட் கரும்பொருளைப் பெறுவீர்கள்.

பாடப்பயிற்சிகள்

கோட்ஜிம்மில், நீங்கள் பல்வேறு விதமான பாடப்பயிற்சிகளைக் காணலாம். நான் முக்கிய வகைகளை இங்கே பட்டியலிடுகிறேன்.

ஓர் எடுத்துக்காட்டில் இருந்து குறியீட்டை நகலெடுங்கள் — இது ஒரு எளிமையான பயிற்சி. அதை முடிக்க, மேல் சாளரத்தில் தோன்றும் Java குறியீட்டை அப்படியே கீழே உள்ள சாளரத்தில் உள்ளிட வேண்டும்.

ஒரு நிரலை எழுதுங்கள் — இவைதான் பாடத்திட்டத்தின் மிக முக்கியமான பயிற்சிகள். ஒவ்வொன்றும் மாறுபட்ட கடினத்தன்மை கொண்டவையாக இருக்கும்: சிறிய மற்றும் எளிமையான பணிகளில் இருந்து கடினமான புதிர்கள் வரை உங்கள் மூளையை உண்மையிலேயே வேலை செய்யத் தூண்டுவதாக இருக்கும்... "கிடைக்கப்பெறுகிறது" என்று குறிக்கப்பிடப்பட்டுள்ள எந்தவொரு பணியிலும் நீங்கள் வேலை செய்யத் தொடங்கலாம். ஒன்றைத் துவங்க, பணி விவரத்தில் இருக்கும் "திற" என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.

இது வெப் IDE ஐத் திறக்கும். முதல் தாவலில் பணி நிபந்தனைகள் இருக்கும். இரண்டாவது தாவலில் உங்கள் குறிமுறையை உள்ளிட வேண்டும். நீங்கள் திட்ட மரத்தை (இதனைப் பின்பு மேலும் பார்ப்போம்) இடதுபுறம் காணலாம்.

பணியை வெற்றிகரமாக முடித்துவிட்டீர்களா என்பதைப் பார்க்க, "சரிபார்" என்ற பொத்தானை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும். இது சரிபார்ப்பிற்காக உங்கள் நிரலை எங்கள் சேவையகங்களுக்கு அனுப்பி, பின்னர் முடிவுகளைக் காண்பிக்கும்.

உங்கள் நிரலைச் சரிபார்க்காமலேயே செயல்படுத்த விரும்பினால், "இயக்கு" என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.

ஆரம்பக் குறியீட்டைத் தற்செயலாக அழித்துவிட்டால், "மீட்டமை" எனும் பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் மீண்டும் தொடங்கலாம்.

சிறு செயற்திட்டங்களை உருவாக்கிடுங்கள் — இவை மிகவும் சுவாரஸ்யமான மற்றும் சவாலான பயிற்சிகள்! சிறு செயற்திட்டத்தில் தொடர்ச்சியான ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட துணை பணிகள் இருக்கும். முடிவில், கேம் போன்ற ஒரு சொந்த சிறிய செயற்திட்டத்தை நீங்கள் உருவாக்கியிருப்பீர்கள். உங்கள் முதல் சிறு செயற்திட்டத்தை உருவாக்குவதற்கு முன்பு, நீங்கள் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளன. நிலை 20 வரை உங்கள் முதல் சிறு செயற்திட்டத்தை நீங்கள் பார்க்க மாட்டீர்கள்.

மேதாவிகளுக்கான இடைவேளை — அனைத்தையும் விட இவைதான் மிகவும் கடினமான பாடப்பயிற்சிகளாக இருக்கும்! விளையாட்டாகக் கூறினேன்! பெரும்பாலும், "இடைவேளையில்" நீங்கள் தொழில்நுட்பம் தொடர்பான சிறந்த வீடியோவைப் பார்ப்பீர்கள். ஆம், இந்தப் பயிற்சிகளுக்கும் கூட நீங்கள் கரும்பொருளைப் பெறுவீர்கள்.

பி.கு: நிலை 3 இல் தொடங்கி, IntelliJ IDEA எனப்படும் ஒருங்கிணைந்த மேம்பாட்டுச் சூழலை (IDE) பயன்படுத்தி உங்களால் பணிகளில் வேலை செய்யமுடியும். அதை எவ்வாறு செய்வது என்பதை ஒரு பாடம் உங்களுக்குக் கற்பிக்கும். ஆனால் அதைப் பற்றி பின்னர் பார்க்கலாம்.

பாடங்கள் மற்றும் பணியின் நிலைகள்

பணிகள் பின்வரும் நிலைகளைக் கொண்டிருக்கலாம். "கிடைக்கப்பெறுகிறது" - முன்னேறிச் சென்று அதை முடிக்க முயலுங்கள்!

"முடிந்தது" - நீங்கள் இந்தப் பணியைக் கடந்த மூன்று நாட்களுக்குள் வெற்றிகரமாக முடித்து, கரும்பொருளைச் சேகரித்தீர்கள். உங்கள் தீர்வை மேம்படுத்த அதற்கு மீண்டும் விடை காண முயற்சி செய்யலாம்.

"மூடப்பட்டது" - நீங்கள் இந்தப் பணியை முடித்து, கரும்பொருளைச் சேகரித்து மூன்று நாட்களுக்கு மேலாகிவிட்டது. இனி சரிபார்ப்புக்காக இந்தப் பணியை உங்களால் சமர்ப்பிக்க முடியாது.

"பூட்டப்பட்டது" - இதற்கான அர்த்தத்தை நீங்களே புரிந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன். பணியை அணுக, அதனுடன் தொடர்புடைய பாடத்தை நீங்கள் திறக்க வேண்டும். அதற்கு இதை அணுகுவதற்கு வழிவகுக்கக்கூடிய அனைத்து பாடங்களையும் நீங்கள் திறக்க வேண்டும்.

பாடங்களில் இரண்டு நிலைகள் காட்டப்படும்: "கிடைக்கப்பெறுகிறது" மற்றும் "பூட்டப்பட்டது".

நீங்கள் வந்துள்ள பாடமானது நீண்ட "பூட்டப்பட்ட" பாடங்களுக்கு முன்புள்ள கடைசி "கிடைக்கப்பெறுகிற" பாடமாகும். முதல் "பூட்டப்பட்டது" பாடத்தை நீங்கள் கிளிக் செய்தால், அதைத் திறக்க ஒரு குறிப்பிட்ட அளவு கரும்பொருளைச் செலுத்துமாறு கேட்கப்படுவீர்கள்.