"வாவ், இன்னொரு மனித பெண்! ஆனால் இம்முறை கருப்பு முடியுடன். எவ்வளவு அற்புதம்!"
"வணக்கம், என் பெயர் கிம்."
"வணக்கம், என் பெயர் அருண்."
"எனக்கு தெரியும். நான்தான் உனக்கு பெயர் வைத்தது. டியாகோ அதை யோசித்திருக்க மாட்டார்."
அருணின் எண்ணங்கள் எலக்ட்ரான்களின் வேகத்தில் ஓடின. "ம்ம்ம்... அவள் மிகவும் அழகாக இருக்கிறாள்... அவளுக்கு ரோபோக்களை பிடிக்குமா என்று தெரியவில்லை."
"மீண்டும் பாடத்திற்கு வருவோம். உங்களுக்குப் பொருளை விளக்க எளிய சொற்களைப் பயன்படுத்துகிறேன்."
"சரி."
"பேராசிரியரும் ரிஷியும் கூறியதுடன் நான் ஒரு சில விஷயங்களைச் சேர்க்க விரும்புகிறேன்."
"Java-வில், நீங்கள் கட்டளைகளை எழுதலாம், ஆனால் குறிமுறையில் அந்த கட்டளைகளுக்கு உங்களால் கருத்துரைகளையும் சேர்க்க முடியும். கருத்துரைகளை தொகுப்பி (Compiler) முற்றிலும் புறக்கணித்துவிடும். நிரல் இயக்கப்படும்போது, அனைத்துக் கருத்துரைகளும் தவிர்க்கப்படும்."
"எனக்கு ஒரு எடுத்துக்காட்டு வழங்க முடியுமா?"
"நிச்சயமாக."
public class Home
{
public static void main(String[] args)
{
/*
இப்போது 'Amigo Is The Best' என்ற சொற்றொடரை திரையில் காண்பிப்போம்
*/
System.out.print("Amigo ");
System.out.print("Is ");
System.out.print("The ");
System.out.print("Best");
}
}
"இப்போது சொற்றொடரைக் காண்பிப்போம்...' என்ற கருத்தைச் சேர்த்துள்ளோம்... கருத்துரைன் தொடக்கத்தில் (/*
) என்ற ஒரு ஜோடிக் குறியீடுகளாலும் மற்றும் இறுதியில் (*/
) என்ற குறியீடுகளாலும் குறிக்கப்படுகிறது. நிரல் தொகுக்கப்படும்போது, குறியீடுகளுக்கு /*
மற்றும் */
இடையில் உள்ள எல்லாவற்றையும் தொகுப்பி (compiler) தவிர்த்துவிடும்."
"அதாவது நான் விரும்பும் எதையும் எழுதலாமா?"
"ஆம். வழக்கமாக, புரிந்துகொள்ள கடினமாக இருக்கும் குறிமுறையின் பகுதிகள் கருத்துரையின் மூலம் குறிக்கப்படுகின்றன. சில கருத்துக்கள் டஜன் கணக்கான சரங்களைக் (strings) கொண்டிருக்கும். பெரும்பாலும் அவை வழிமுறைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதின் நுணுக்கங்களை விவரிக்கும் வகையில் வழிமுறைகளுக்கு முன்னர் எழுதப்படும்."
"குறிமுறையில் கருத்தைச் சேர்க்க இன்னும் ஒரு வழி உள்ளது. நீங்கள் இரண்டு முன்னோக்கிய சாய்வுக்கோடுகளைப் பயன்படுத்தலாம் (//
)."
public class Home
{
public static void main(String[] args)
{
System.out.print("Amigo ");
System.out.print("Is The "); // இதுவும் ஒரு கருத்துரைதான்
System.out.print("Best");
}
}
"இங்கே, குறிமுறையில் // -இலிருந்து தொடங்கி // வரை முடிகின்ற பகுதி ஒரு கருத்துரையாகக் கருதப்படும். வேறு விதமாகக் கூறுவதானால், 'கருத்துரையை முடிக்க' இன்னொரு ஜோடி குறியீடுகள் பயன்படுத்தப்படுவது இல்லை."
"இன்னொரு விஷயம், சில கருத்துரைகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்."
// இந்தக் குறிமுறைக்கு நான் பொறுப்பல்ல. அவர்கள் என் விருப்பத்திற்கு மாறாக இதை எழுத வைத்தனர்.
// அன்புள்ள என் எதிர்காலமே. தயவுசெய்து என்னை மன்னித்து விடு.
// நான் எவ்வளவு வருந்துகிறேன் என்பதை வெளிப்படுத்தக் கூட என்னால் முடியவில்லை.
// நான் மீண்டும் இதுபோன்ற ஒன்றைப் பார்க்க நேரிட்டால், வேலையில் என்னால் முழுமையாக மனம் செலுத்த முடியாமல் உடைந்து போவேன்.
// இந்த நிபந்தனை திருப்திகரமாக இருந்தால்,
// கரும்பொருள் பரிசை அறிவிப்பதற்கு என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். தொலைபேசி: xxx-xxx-xxx.
// அன்புள்ள பராமரிப்பாளரே:
// இந்த நிரல்கூறை (routine) 'மேம்படுத்தி' முடித்து,
// அது எவ்வளவு பயங்கரமான தவறு என்பதை உணர்ந்த பின்னர்,
// அடுத்த நபருக்கு எச்சரிக்கை அளிக்கும் வகையில்
// பின்வரும் எண்ணியை அதிகரிக்கவும்:
// total_hours_wasted_here = 42
// இதை நான் எழுதும்போது, நான் என்ன செய்கிறேன் என்பது கடவுளுக்கும் எனக்கும் மட்டுமே தெரியும்
// இப்போது, கடவுளுக்கு மட்டுமே தெரியும்
// சில நேரங்களில் தொகுப்பி எனது எல்லாக் கருத்துரைகளையும் புறக்கணித்துவிடும் என்று நம்புகிறேன்.
// நான் இந்த அனைத்து குறிமுறையையும், எனது எல்லா வேலைகளையும், என் மனைவி டார்லீனுக்கு அர்ப்பணிக்கிறேன்
// இது பொதுவில் வெளியிடப்பட்ட பின்னர், அவர்தான் என்னையும் எங்கள் பிள்ளைகளையும்
// நாயையும் ஆதிரிக்க வேண்டும்..
// குடித்திருக்கிறேன், பின்னர் சரிசெய்கிறேன்
// மாயாஜாலம். தொட வேண்டாம்
"ஆம், சில கருத்துரைகள் மிகவும் வேடிக்கையாக உள்ளது."
"இன்றைக்கு அவ்வளவுதான்."
"இது சிறிய பாடமாக இருந்தாலும், சுவாரஸ்யமாக இருந்தது. நன்றி, கிம்."
GO TO FULL VERSION