"இப்போது நான் சொல்கிறேன். சரி, கேளுங்கள்."

சில விஞ்ஞானிகள் இணைந்து ஒரு சூப்பர் கணினியை உருவாக்கினர். அது மிகவும் சக்தி வாய்ந்தது. அந்தக் கணினியால் எந்த கேள்விக்கும் பதலிளிக்க முடியும். எனவே, அவர்கள் தங்கள் கேள்வியைக் கேட்டனர்:
"கடவுள் இருக்கிறாரா?"
கணினி சிந்திக்கத் தொடங்குகிறது. சிறிது கீச்சொலி மற்றும் சிமிட்டும் ஒளிக்கு பின்னர், அது கூறுகிறது:
"போதுமான தகவல் இல்லை. கிரகத்தின் மிக சக்திவாய்ந்த கணினிகளுடன் என்னை இணைத்திடுங்கள்."
விஞ்ஞானிகள் என்ன செய்வது என்று யோசித்த பிறகு அதை நகைப்பதற்கு முடிவு செய்தனர். மீண்டும், அவர்கள் தங்கள் கேள்வியைக் கேட்டனர்:
"கடவுள் இருக்கிறாரா?"
அதிகக் கீச்சொலி மற்றும் சிமிட்டும் ஒளிக்குப் பின்னர், கணினி கூறியது:
"போதுமான தகவல் இல்லை. பூமியிலுள்ள அனைத்து கணினிகளுடனும் என்னை இணையுங்கள்."
இதைச் செய்வது கடினதான் என்றாலும், பூமியிலுள்ள எல்லாக் கணினிகளுடனும் அதை இணைத்தனர். மீண்டும், அவர்கள் தங்கள் கேள்வியைக் கேட்டார்கள். மீண்டும், கணினி கூறுகிறது:
"போதுமான தகவல் இல்லை. பூமியிலுள்ள அனைத்து நெட்வொர்க்குகள், அனைத்து கணக்கீட்டுச் சாதனங்களுடன் என்னை இணையுங்கள்."
கடும் முயற்சிக்கு பிறகு இந்தக் கோரிக்கையை விஞ்ஞானிகள் நிறைவேற்றினர். இறுதியாக, மீண்டும் ஒருமுறை அவர்கள் கேட்டனர்:
"கடவுள் இருக்கிறாரா?"
பதில்:
"இப்போது இருக்கிறார்."