Java நிரலாக்கம் Java-வை அடிப்படையிலிருந்து கற்றுக்கொள்ளுதல்

வணக்கம். நீங்கள் படிக்கின்ற இந்த பாடங்கள் Java பாடங்கள் என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும். இந்தப் பாடநெறி உண்மையில் செய்முறைப் பயிற்சி கற்றலுக்கான (1200 பயிற்சிகளுக்கும் மேலாக) வாய்ப்புகள் நிறைந்தது மற்றும் வயது வந்த மாணவர்களுக்கானது. நான் சலிப்பான விரிவுரைகளை வெறுக்கிறேன். அதனால்தான் கோட்ஜிம் ஒரு ஆன்லைன் விளையாட்டாக உருவாக்கப்பட்டுள்ளது.

உங்கள் குணத்தைச் சமப்படுத்தக்கூடிய விளையாட்டை எப்போதாவது நீங்கள் விளையாடி இருக்கீர்களா? சில நேரங்களில், நீங்கள் கவனிப்பதற்கு முன்பே நீங்கள் அதில் ஈர்க்கப்படுவீர்கள், இல்லையா? நான் எங்கு வருகிறேன் என்று உங்களுக்குத் தெரிகிறதா? கோட்ஜிம்மில், உங்கள் குணாதிசயங்களை நிலை 1இல் இருந்து நிலை 40 வரையில் உயர்த்த வேண்டும் (இதன் தொடர்ச்சியை நாங்கள் வெளியிட்ட பின்னர், நிலை 80 வரையிலும் கூட). முழுப் பாடத்திட்டத்தையும் கற்று விட்டால், நீங்கள் ஒரு Java நிரலாக்குநர் ராக்ஸ்டார் ஆகிவிடுவீர்கள்.

நிலை 40 வந்துவிட்டீர்கள் எனில், உங்களால் ஒரு ஜூனியர் Java டெவலப்பர் வேலையைப் பெற்று விட முடியும். சிலர் நிலை 20 இல் கூட வேலையைப் பெற்று விட முடியும், ஏனெனில் கோட்ஜிம் பல்வேறு பயிற்சிகளைக் கொண்டுள்ளது. இல்லை, உண்மையாக -- இதில் நிறைய உள்ளது.

இந்த விளையாட்டு தொலைதூர எதிர்காலத்தில் -- 3018 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டுள்ளது. அப்போது மனிதர்கள் பூமியை ரோபோக்களுடன் பகிர்ந்து கொண்டிருப்பார்கள், விண் பயணம் வழக்கமான ஒன்றாகி இருக்கும்.

ஒரு காலத்தில், அறியாத கிரகத்துடன் ஒரு விண்கலன் மோதியது...

நடந்த கதை

Java நிரலாக்கம் அடிப்படையிலிருந்து கற்றுக்கொள்ளுதல்

கேலக்டிக் ரஷ் பயணக்குழு அறியப்படாத கிரகத்தில் மோதித் தரையிறங்கியது. விபத்தின் போது, விண்கலன் மலைப்பகுதியில் மோதி கிட்டத்தட்ட அதன் உடல் முழுவதும் சிதிலங்களுக்குள் புதைந்தது. கலத்தை விடுவிக்க பல நாட்கள் முயற்சித்த பிறகு, வீடு திரும்பும் நம்பிக்கையை பயணக்குழுவினர் இழந்துவிட்டனர்/ அவர்கள் அந்தப் புதிய பழக்கமில்லா இடத்தில் தங்கத் தொடங்கினர்...

ஒரு வாரத்திற்குப் பிறகு, கலத்தின் நேவிகேட்டரான எல்லி, அந்தக் கிரகத்தில் ஆயிரக்கணக்கான வைல்டு ரோபோக்கள் குடியிருப்பதைக் கண்டிபிடித்தார். அந்த ரோபோக்களால் தாங்களாகவே பாறைகளை அகற்றி கலத்தை விடுவித்திருக்க முடியும்/ ஆனால் அவை மிகவும் தொன்மையானவர்களாகவும் நாகரிகமின்றியும் இருந்தன. எதையும் செய்யக்கூடிய திறன் அவற்றிற்கு இல்லை. அவற்றால் தங்களின் கைகளைக் கொண்டு பாறைகளை உயர்த்தக் கூட முடியவில்லை.

மிஷனின் தலைமை விஞ்ஞானி பேராசிரியர் நூடுல்ஸ் பின்னர் நினைவு கூர்ந்தார்:
"சில நாட்களுக்குப் பிறகு, நான் ஒரு தீர்வைக் கொண்டு வந்தேன். எங்கள் பயணக்குழுவின் உறுப்பினரான டியாகோவின் மென்பொருளை எடுத்து அதனை கட்டுமானியின் மென்பொருளாக மாற்றி, பிறகு அதனை வைல்டுரோபோக்களின் மீது ஏற்றலாம்", என்று கூறினேன்.

"ஆனால் அதிர்ஷ்டம் எங்களுக்கு எதிராக இருப்பதாகத் தோன்றியது. அதைக் கூர்ந்து பார்த்த பிறகு, அந்த ரோபோக்களில் மென்பொருளை ஏற்றுவதற்கான எந்த இணைப்பிகளும் இல்லை என்பதைக் கண்டறிந்தோம். உண்மையில், அவற்றில் எந்த இணைப்பிகளுமே இல்லை!"

Java நிரலாக்கம்

"பயணக்குழுவில் இருந்த ஒரே வேற்றுகிரகவாசியான பிலாபோ, தனது சொந்த கிரகத்தில் ஒருமுறை ஒரு ரோபோவைச் சந்தித்துள்ளதை நினைவு கூர்ந்தார். அவருக்கு மட்டுமே எவ்வாறு நிரல் செய்வது என்று தெரியும். அது மட்டுமல்லாமல், இந்த ரோபோவால் தனது சொந்த மென்பொருளிலும் பிழைகளைத் தானே சரிசெய்துகொள்ள முடியும்."

"அப்போதுதான் எனக்கு ஒரு அற்புதமான யோசனை ஏற்பட்டது. நான் ஒருமுறை, திறமையான ரோபோவை Pascal இல் நிரல் செய்ய கற்றுக் கொடுத்திருக்கிறேன்."

"மிகவும் திறமையான இளம் ரோபோவைப் பிடித்து, Java நிரலை எவ்வாறு செய்வது என்று அதற்கு கற்றுக் கொடுக்குமாறு உத்தரவு பிறப்பித்தேன். அதன் புதிய குறியீட்டுத் திறன்களால், அதனால் தனது சொந்த மென்பொருளை மீண்டும் எழுதி எங்களுக்கு உதவ முடியும்!"

Java-வை அடிப்படையிலிருந்து கற்றுக்கொள்ளுதல்

"இறுதியில், நாங்கள் நம்பிக்கைக்குரிய ஒன்றைக் கண்டோம். டியாகோ தனக்கு ஒரு சகோதரன் வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அந்த ஆசை நிறைவேறவே இல்லை. இதனால், அந்த ரோபோவிற்கு அருண் என்று பெயரிட டியாகோ பரிந்துரைத்தார்."

அருணுக்கு ஒவ்வொரு மாதமும் அது Java கற்றுக் கொள்வதற்காக உலோக மணிகளை வழங்கினேன். பிறகு அதன் பயிற்சிக்குப் பிறகு சிதிலங்களை அகற்ற ஒவ்வோராண்டும் $10 வழங்கினேன். காட்டுமிராண்டிகளுக்கு, இது தாராளமான தொகைதான். எல்லாவற்றிற்கும் மேலாக, நாங்கள் அவற்றிற்கு இலவசமாக அறிவூட்டுகிறோம்."

Java கற்றுக்கொள்ளுங்கள்

டியாகோ பின்னர் தனது நினைவுக் குறிப்புகளில் எழுதினார்:

"என் சக ரோபோவின் இந்த அப்பட்டமான கொள்ளையால் நான் கோபமடைந்தேன். ஆனால் முழுக் குழுவினரும் பேராசிரியர் மற்றும் ரிஷிக்கு பக்கபலமாக இருந்தனர். எனவே, நிச்சயமாக, நான் ஒப்புக்கொண்டேன், அல்லது குறைந்தபட்சம் ஒப்புக்கொண்டதாக நடித்து, அருணுக்குக் கற்பிக்க உதவ முன்வந்தேன். ஹா-ஹா! எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு ரோபோவிற்கு இன்னொரு ரோபோவைத் தவிர வேறு யாரும் சிறப்பாக கற்பிக்க முடியாது."

"நான் உதவ முன்வந்ததற்காக அனைவரும் மகிழ்ந்தனர், அருணுக்கு Java நிரலாக்கப் பயிற்சி அளிக்க அவர்களும் என்னுடன் சேர முடிவு செய்தனர்."


நீங்கள் நிலை 1 இல் தொடங்குவீர்கள். உங்கள் குறிக்கோள் அருணை நிலை 40 ஐ அடையச் செய்ய உதவுதல். ஆனால் சிறியதில் இருந்து ஆரம்பிக்கலாம். முதலில் Java பாடங்களின் நிலை 2 ஐ அடைய முயற்சிப்போம். ஒருவேளை நீங்கள் அதை மிகவும் நேசித்து Java படிப்பை முடித்து நீங்கள் அதைக் கவனிக்கும் முன்பே வேலையைக் கூட பெற்று விடலாம்.)

இப்போது, முதலில் இருந்து கற்கத் தொடங்குவோம். அடுத்த பாடம் என்பதைக் கிளிக் செய்யவும்.